மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நகைகள் சரிபார்ப்பு பணி கோவை இந்து சமய அறநிலைத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, இந்த கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் அர்ச்சகர்
ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடையுள்ள 7 பொன்தாலி, 14 பொன் குண்டுகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவை போலியானது என கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.