சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். சமீபத்தில் இக்கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அம்மனின் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் மேற்பார்வையில் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ரூ. 67,80,962 ரொக்கமும், 1 கிலோ 897 கிராம் தங்கம், 2 கிலோ 527 கிராம் வெள்ளி, 59 வெளிநாட்டு பணம், 959 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்திருந்தன.

Comments are closed.