Rock Fort Times
Online News

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான்…* மாவட்ட கலெக்டர் பிரதிக் தயாள் பங்கேற்பு!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் “ஸ்டார்ட் Run – ஸ்டாப் Drugs” என்ற பெயரில் 5 கிலோமீட்டர் தூரம் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
திருச்சியில் இன்று (ஜூன் 26) நடைபெற்றது. 14 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதிக் தயாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டரங்கை வந்தடைந்து நிறைவுபெற்றது. இதில் 350-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு ஓடினர். மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, “போதையில்லா தமிழகம்” உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் பிரதிக் தயாள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கலெக்டர் முன்னிலையில் மாரத்தானில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்