கேரளா, கர்நாடகா உட்பட 89 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு…!
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 2ம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளாவை பொறுத்தவரை அங்குள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்றைய தினம் தேர்தல் நடைபெறுகிறது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூரில் இருக்கக்கூடிய வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். குடும்பத்தினருடன் வந்த பினராயி விஜயன், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதேபோல, கர்நாடகாவை பொறுத்தவரை 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் மத்திய நிதியமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Comments are closed.