திருச்சி வாழவந்தான்கோட்டை, அம்மாபேட்டை துணை மின் நிலையங்களில் ஜனவரி 21ம் தேதி( செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஜெய் நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதி நகர், கீழக் குமரேசபுரம், மேலக் குமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ் நகர், பெல் டவுன்ஷிப் பி மற்றும் சி செக்டரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி.நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, சிட்கோ தொழிற்சாலை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார் நகர், ரெட்டியார்தோப்பு, ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 21-ம் தேதி காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதேபோல, அம்மாபேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராம்ஜிநகர், கள்ளிக்குடி, அரியாவூர், சன்னாசிப்பட்டி, சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி, மேல பாகனூர் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் எம். கணேசன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Comments are closed.