பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை(06-08-2024) மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், மேலகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் தொழிற்பேட்டை, சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1
of 938
Comments are closed.