தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய அரசு சார்பில் நெட், செட் ஆகிய தகுதித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சி அடிப்படையில் செட் தேர்வை நடத்தி வருகின்றன. அதன்படி, 2024 முதல் அடுத்த 3 வருடங்களுக்கு செட் தகுதித்தேர்வை நடத்தும் பொறுப்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில் இம்மாதம் 7, 8-ல் நடைபெறவிருந்த செட் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட செட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Comments are closed.