பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கமான பேருந்துகளோடு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதற்காக திருச்சியில் உள்ள மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களோடு மேலும் 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள சோனா-மீனா தியேட்டர் எதிரே ஒரு தற்காலிக பேருந்து நிலையமும், மன்னார்புரம் நால்ரோடு பகுதியில் மற்றொரு தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் நால்ரோடு பகுதியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். தஞ்சை, நாகை, திருவாரூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா- மீனா தியேட்டர் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பேருந்து நிலையங்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் , உதவி கமிஷனர்கள், போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் வருகிற 17 ஆம் தேதி வரையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.