Rock Fort Times
Online News

பொங்கல் திருநாள்: தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்- பயணிகள் கடும் அதிர்ச்சி…!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி( திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை என்பதாலும், முன்னதாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட ஆயத்தமாகி வருகின்றனர் . தொடர் விடுமுறை காரணமாக தொலைதூர பஸ்கள் மற்றும் ரயில்களில் முன்பதிவு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இதன் காரணமாக வெளியூர் செல்ல இருப்பவர்கள் விமானத்தில் செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால், விமானத்தில் செல்ல கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் அதிச்சியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளன. சென்னை- மதுரை இடையே விமான கட்டணம் 5 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை- மதுரைக்கு வழக்கமாக ரூ.3,367 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- கோவைக்கு வழக்கமாக ரூ.3,315 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.14,689 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- சேலம் செல்ல ரூ.2,290 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.11,329 ஆக அதிகரித்துள்ளது. சென்னை- திருச்சிக்கு வழக்கமாக ரூ.2,264 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.11,369 ஆக உயர்ந்துள்ளது. இதனால், விமானத்தை தவிர்த்து விட்டு ஆம்னி பஸ்ஸில் செல்லலாமா? என சிலர் திட்டமிட்டு வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்