Rock Fort Times
Online News

விபத்தில் காவலர் மரணம்: மனைவிக்கு ரூ.34 லட்சம் இழப்பீடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி…!

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் விஜய லட்சுமி. இவரது கணவர் ராஜா திருச்சி காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்தார். 2017 ஆம் ஆண்டு அவர் பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் எதிரே வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி துறையூர் சார்பு நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்றம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விஜயலட்சுமிக்கு ரூ. 34 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை போக்குவரத்துக் கழக மனுவை தள்ளுபடி செய்ததுடன் விஜயலட்சுமிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து விஜயலட்சுமி மீண்டும் துறையூர் சார்பு நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காததால், சார்பு நீதிபதி வெங்கடேசன் 4 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அமீனா கணேசன், மணிகண்டன் ஆகியோர் 4 அரசு பஸ்களை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர். கோர்ட்டு உத்தரவிட் டும் இழப்பீடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்