காக்கிச் சீருடை அணியாமல் காவல் பணி! சமயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றினார் திருச்சி எஸ்.பி !
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கவிதா. இவர் பணியின் போது பல நேரங்களில் போலீஸ் யூனிபார்ம் அணியாமல் மஃப்டியில் பணியாற்றி வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் தெரிந்தது. அதன்பேரில் எஸ்.பி,காவல் உதவி ஆய்வாளர் கவிதாவை அதிரடியாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.