திருச்சி மாநகரில் தங்கும் விடுதிகள், சந்தேகப்படும் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை: 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது…!
திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள், லாட்டரி மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து அடுத்தவர் நிலத்தை அபகரித்தவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகங்களுடன் கூடிய தங்கும் விடுதிகளில் இச் சோதனை நடைபெற்றது. அங்கு சந்தேகப்படும் படியாக யாரேனும் தங்கி உள்ளனரா, பொருட்கள் ஏதாவது பதுக்கி வைத்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ராம்ஜிநகர் மில் காலனியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 1 கிலோ 500 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ள சில வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு வீடுகளில் கஞ்சா வைத்திருந்ததாக பிரியா (42), தீபிகா (22) ஆகிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மாநகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments are closed.