Rock Fort Times
Online News

கட்டப்படும் புது வீடுகள் தான் டார்கெட்: மின் ஒயர்களை திருடி விற்று மது குடித்த “பலே” ஆசாமி சிக்கினார்…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் ஆனந்தவள்ளி.  இவர் தனது தந்தை வீட்டின் அருகே வீடு ஒன்று புதிதாக கட்டி வருகிறார்.  இதனால், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.  இந்நிலையில் இன்று( 30-09-2024)  ஆனந்த வள்ளியின்  சகோதரர் செந்தில் குமார் புதிதாக கட்டப்படும் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த மின் ஒயர்கள் திருட்டுப் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து சகோதரிக்கு தகவல் தெரிவித்தார்.  அவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த எலக்ட்ரிக்கல் பொருட்கள் மற்றும் மின்இணைப்பு ஒயர்களை மர்ம ஆசாமி யாரோ அறுத்து எடுத்து சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில்  காவல் ஆய்வாளர் தசரதன், உதவி ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த மர்லின் மகன் லோகேஸ்வரன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்தான் மின் ஒயர்களை திருடி விற்று அதில் கிடைத்த பணத்தில் மது குடித்து வந்ததும், இதே போல புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைத்து திருடி வந்ததும் தெரிய வந்தது.  அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.  புகார் கொடுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் போலீசார் திருடனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்