திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், திருச்சி மாவட்டம் வழியாக மதுரையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி வழியாக மதுரை நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் நிறுத்தி எங்கு செல்கிறீர்கள், எதற்காக செல்கிறீர்கள்? என்று தீவிரமாக விசாரித்த பிறகே அனுமதித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் பகுதிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், இந்து அமைப்பினர், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வருவதை தடுப்பதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Comments are closed.