நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், லால் சலாம் படத்தில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாகவும், இப்படத்தை வெளியிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், ஆகவே லால் சலாம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. லால் சலாம் படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.