திருச்சி மாவட்ட மக்கள் வரியினங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்- கலெக்டர் பிரதீப்குமார்…!
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் செலுத்த வேண்டிய வரியினங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணத்தை தாமதமின்றி பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ, வரி வசூல் முகாம்களிலோ, ஊராட்சி களப் பணியாளர்களிடமோ, பிஓஎஸ் இயந்திரம், இணையதளம் மூலமாகவோ செலுத்த வேண்டும். வங்கிக்கடன் அட்டை பற்று அட்டை மூலமாகவும், யுபிஐ செயலிகள் மூலமாகவும் செலுத்தலாம். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கையும், தண்ணீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.