Rock Fort Times
Online News

குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்…!

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, செங்கரையூர் கிராமத்திலிருந்து பெரம்பலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 4 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் ஐந்தாவதாக ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கரையூர், அரியூர், கல்விக்குடி, அன்பில், கே.வி.பேட்டை, பூண்டி  ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த லால்குடி தாசில்தார் மற்றும் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்   மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில், ஏற்கனவே இப்பகுதியில் 4 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இப்பகுதியில் இருந்து மணல் அதிகளவு எடுத்து செல்லப்படுவதால் நீர்மட்டம் மேலும் குறைந்து விட்டது. தற்போது 5-வது ஆழ்குழாய் கிணறு அமைக்கும்  பணி நடந்து வருகிறது. இதனை நிறுத்த வேண்டும் என்றனர். இதுகுறித்து விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணலாம் என்று தாசில்தார் மற்றும் இன்ஸ்பெக்டர் கூறியதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்