திருச்சியில் இருந்து சிங்கப்பூா், துபாய் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்…! (வீடியோ இணைப்பு)
ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சாா்பில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானச் சேவை தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக நேற்று இரவு திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால், துபாய் செல்ல முன்பதிவு செய்து காத்திருந்த 150 பயணிகளும், சிங்கப்பூருக்கு செல்ல இருந்த 140 பயணிகளும் அந்த விமான நிறுவனத்தின் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவர்களிடம் அதிகாரிகளும், காவல்துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக அதே டிக்கெட்டை வைத்து வேறு நாட்களில் பயணிக்கலாம், இல்லையெனில் பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.