Rock Fort Times
Online News

திருச்சியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பறிமுதல் -ஆலை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது…!

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில்  ஆங்காங்கே ரேஷன் அரிசி கடத்தல் தொடர்புடைய முறைகேடுகளை தடுக்கும் வகையில் சோதனைகள், வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டன. அப்போது  திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வாலிபர் ஒருவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மூட்டை, மூட்டையாக கட்டி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், கரூர் மாவட்டம் பொய்யாமணி அருகே உள்ள  திருச்சாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த திலீபன் (22) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி கால்நடை தீவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து திலீபனை கைது செய்த போலீசார், அங்கிருந்த சுமார் 1050 கிலோ அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல, லால்குடி அருகே எல்.அபிசேகபுரம் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு, 840 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு ஆலை உரிமையாளர் சங்கர் (39) என்பவரை கைது செய்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இரு சம்பவங்களிலும் சேர்த்து மொத்தம் 1850 கிலோ அரிசி பறிமுதல் செய்த, காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் போலீசாரை மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பாராட்டினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்