Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் ஜூன் 27-ம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது…* மாநகராட்சி ஆணையர் தகவல்!

திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங்  வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் குழாயில் அரியமங்கலம்- பால்பண்ணை அருகே உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சரி செய்யும் பணி நாளை (26.06.2026) நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து 27.06.2026 ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது. 28-ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்