ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்…!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநரும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய இன்று(09-05-2024) காலை வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கோவிலில் கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, இராமானுஜர் சன்னதி உள்ளிட்ட சந்ததிகளுக்கு நடந்தே சென்று தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மணியக்காரர் ஸ்ரீதர் மற்றும் அர்ச்சகர்கள் ஆகியோர் பெருமாள் புகைப்படத்தை நினைவு பரிசாக வழங்கினர்.

பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து புறப்பட்ட ஆளுநர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்றார்.அவரை கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பின்னர், ஜம்புகேஸ்வரர் சன்னதி, அகிலாண்டேஸ்வரி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Comments are closed.