பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள்- பாரிவேந்தர் எம்.பி தொடங்கி வைத்தார்…!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறையூர் பகுதிகளில் ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை பாரிவேந்தர் எம்பி தொடங்கி வைத்தார். ரூ. 14 லட்சம் மதிப்பில் வேங்கடத்தனூரில் நியாய விலை கடைக்கு பூமி பூஜையுடன் பணியை தொடங்கி வைத்தார். பின்னர், அதே ஊரை சேர்ந்த சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த வேங்கடத்தானூரை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி அவரது 2 குழந்தைகளின் பள்ளி படிப்பு செலவை ஏற்பதாக தெரிவித்தார். ரூ. 18.56 லட்சம் மதிப்பில் கீழ்குன்னுப்பட்டியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ. 31 லட்சம் மதிப்பில் சித்திரப்பட்டி மதுராபுரியில் கட்டப்பட்ட சமுதாய கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், சிக்கதம்பூர் மானிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சத்தில் கழிப்பறை கட்டிடம் கட்டும் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தார்.
ரூ. 31.56 லட்சம் மதிப்பில் வெங்கடாசலபுரம் மானிய துவக்கப் பள்ளியில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் ரூ. 48 லட்சம் மதிப்பில் சோபனபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்த அவர், மாணவர்களிடையே உரையாடினார். தொடர்ந்து,
உப்பிலியபுரம் ரெட்டியார் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், ரூ. 5 லட்சத்தில் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி 11-வது வார்டில் பயணியர் நிழற்குடை மற்றும் 17 லட்சதில் சிறிய பாலத்துடன் வடிகால் கால்வாய் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.