Rock Fort Times
Online News

ரயில் டிக்கெட்டுகளை அதிகளவு முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றவர் சிக்கினார்…!

திருச்சியில் ரயில் டிக்கெட்டுகளை அதிகளவு முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  திருச்சி கோட்ட ரயில்லே பாதுகாப்பு படை ஆணையர் அபிஷேக் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே சந்திப்பு காவல் ஆய்வாளர் கே.பி செபாஸ்டின், உதவி ஆய்வாளர்  ஜி.ரவிச்சந்திரன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் மேலப்புதூர் கான்வென்ட் சாலையிலுள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது கருமண்டபம் மாருதி நகர் 2ம் தெருவைச் சேர்ந்த  வி.பிரான்சிஸ் சேவியர் (54) என்பவர் ஐஆர்சிடிசி உரிமமின்றி அதிக ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனை, பிரான்சிஸ் சேவியர் ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அங்கிருந்த லேப்டாப் ரூ.40,092 மதிப்பிலான ரயில் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து ரயில்வே நீதிமன்றத்தில் பிரானசிஸ் சேவியரை ஆஜர்படுத்தி சொந்தப் பிணையில் அவரை விடுவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்