Rock Fort Times
Online News

திருவள்ளூர் தொழிற்சாலை பிரச்சனை:* சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளி!

திரு​வள்​ளூர் மாவட்​டம், ஊத்​துக்​கோட்டை வட்​டம் பெரியபாளையம் அடுத்த கன் னிகைப்​பேர் பகு​தி​யில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. சென்னை வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வரு​கின்​றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர். நேற்று காலை வழக்​கம் போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, குளிர்​சாதனப் பிரி​வில் பயன்​படுத்​தப்​படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலாளர்களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்பட்டுள்ளது. இதில், 70-க்கும் மேற்பட்ட தொழிலா​ளர்கள் மயக்கம் அடைந்​தனர். சிலருக்கு வாய், மூக்​கு, கண், காதுகளில் ரத்​தக் கசி​வும் ஏற்​பட்​ட​தால் பதற்​ற​மான சூழல் உரு​வானது. இதில் இதுவரை 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளூர் விபத்து குறித்து இன்று(ஜூன் 22) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விதி எண் 110-ன் கீழ் விளக்கமளிக்கையில், “திருவள்ளூர் அமோனியா வாயு கசிவால் 70 பெண்கள், 4 ஆண்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 27 பேர் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். இதில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான செலவை அரசே மேற்கொள்ளும். தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று கூறினார். அப்போது அமைச்சரின் விளக்கத்துக்கு முன்னதாக தங்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி திமுக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்