தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இன்று (ஜூன் 22) பிறந்தநாள் ஆகும். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ”தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்,
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், முதல்வர் ஜோசப் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.