திருச்சி, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் முன்னாள் உப தலைவர் சுவாமி பரானந்தர் காலமானார்…!
திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே திருப்பராய்த்துறையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் மற்றும் கலாச்சார முன்னேற்றங்களுக்காக பாடுபட்டு வரும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் பல கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது. இங்கு பயின்ற மாணவ, மாணவிகள் பல்வேறு நிலைகளில் உயர்ந்த இடத்தில் உள்ளனர். இந்நிலையில் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் முன்னாள் உபதலைவர் சுவாமி பரானந்தர் ( வயது 91) இன்று(23.11.2026) காலை 6 மணியளவில் மதுரை, திருவேடகம் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் காலமானார். அன்னாரின்
தேக தகனம் இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் திருவேடகம் விவேகானந்த கல்லூரி எதிரில் வைகை கரையில் நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி பரானந்தர் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் தகவல் தேவைப்படுவோர் 90802 88571, 94434 09565 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று திருப்பராய்த்துறை தபோவன தலைவர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Comments are closed.