பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் திருச்சியில் நாளை “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றி பேரணி- * திரளாக பங்கேற்குமாறு மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து அழைப்பு…!
திருச்சி மாநகர், மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- காஷ்மீர் பஹல்காம் கொடூர தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சியில் நாளை (மே 15 )மாலை 4 மணிக்கு பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணி திருச்சி மெயின் கார்டு கேட்டில் இருந்து தொடங்கி காந்தி மார்க்கெட் பகுதியில் நிறைவடைகிறது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. , மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில பொருளாளர் சிவசுப்பிரமணியம், புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். வீரத்துடனும், விவேகத்துடனும் துல்லியமாக தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றியை தேடி தந்த இந்திய ராணுவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையை சிறப்பிக்கும் வகையிலும் நடைபெறும் இந்தப் பேரணியில் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள், தேசப் பற்றாளர்கள், திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அனைத்து நிலை பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.