Rock Fort Times
Online News

திருச்சியில் “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி… மாவட்ட கலெக்டர் பங்கேற்பு..!

திருச்சியில் இன்று( மே 14) உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2023 -2024 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடை நின்ற மாணவர்கள் மற்றும் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் என மொத்தம் 3658 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயர்கல்வி படிப்பை தொடர தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கு வகையில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் இன்றும் (மே-14) வரும் 16ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) ஆகிய இரு தினங்கள் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கில் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, கல்லூரி கனவு வழிகாட்டி கையேட்டினை வழங்கி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பி.பொன்முத்துராமலிங்கம், மாவட்ட திறன் மேம்பாட்டுத்துறை உதவி இயக்குநர் முத்தழகி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் அன்புசேகரன், வேலை வாய்ப்புத்துறை துணை இயக்குநர் பொ.ரமேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்