Rock Fort Times
Online News

திருச்சி,குழுமணியில் டூ-வீலர் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி – உறவினர்கள் சாலை மறியல்!

திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் வயது (30). இவரது மனைவி பிரபாவதி. சித்தாள் வேலைக்கு செல்கிறார். இவர்களது மகள் சுபஸ்ரீ. ஒன்றரை வயதாகும் தனது மகள் சுபஸ்ரீயை பிரபாவதி உறையூர் குழுமணி சாலையில் உள்ள மெடிக்கலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சாலையின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுபஸ்ரீ மீது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் குழந்தை சுபஸ்ரீ காயம் அடைந்தது. குழந்தையை மீட்டு குழுமணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

 

இந்நிலையில், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை குழுமணி பஸ் ஸ்டாப் அருகே குழந்தை சுபஸ்ரீ இறப்புக்கு காரணமாக இருந்த இருசக்கர வாகன ஒட்டியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு அங்கு வந்த தாசில்தார் தமிழ்செல்வன், விபத்துக்கு காரமானவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை எடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குழுமணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்