Rock Fort Times
Online News

ஆடி வெள்ளியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு கோவில் நிர்வாகம் ஏற்பாடு

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவார்கள். அதுவும், ஆடி வெள்ளி என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது இந்த நாளில், ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள். ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று, சக்தி தலங்களில் முக்கியமானதான திருச்சி , சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

மேலும் மொட்டை அடித்தும், தீச்சட்டி ஏந்தியும், துலாம் பாரம் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும், அழகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். ஆடி மாதம் என்பதால் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் கூழ், பானகம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் அதிகாலையில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், தன்னாலவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில், துறையூர் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு அம்மன் கோவில்களில் அதிகாலை முதல் பெண்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

புதிதாக கட்சி தொடங்கியவர் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்- விஜயை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 of 900

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்