Rock Fort Times
Online News

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்…

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் திருவுருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு கட்சி நிர்வாகிகளால் மாலை அணிவித்து இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு சோமரசம்பேட்டை, காலை 9.30 மணிக்கு கோப்பு, காலை 10 மணிக்கு ஜீயபுரம், காலை 10.15 மணிக்கு பெட் டவாய்த்தலை (சிறுகமணி) காலை 11 மணிக்கு முசிறி, காலை 11.30 மணிக்கு துறையூர், காலை 12 மணிக்கு மண்ணச்சநல்லூர் ஆகிய இடங்களில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்து கொண்டு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொன் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான், இலக்கிய பிரிவுசெயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் தேவா என்கிற தேவராஜகுமார், ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், மாவட்ட கவுன்சிலர் அய்யம்பாளையம் ரமேஷ், சமயபுரம் நகர இணை செயலாளர் செல்வி வெங்கடேசன், சமயபுரம் பேரூராட்சி கவுன்சிலர் மணிகண்டன், அருண், வக்கீல் தர்மேந்திரன், நவநீதன், ரங்கன், மகாமுனி, வி.என்.ஆர்.செல்வம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்