Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் பர்னிச்சர் கடை உரிமையாளர் தற்கொலை…

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 60). பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவரது மனைவி சித்ரா தனது பெற்றோரை பார்க்க சென்னை சென்றிருந்தார். மகள்கள் ஸ்ரீதேவி (28 ),ஸ்ரீநிதி ஆகியோர் கரூர் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த சரவணன், மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெண்ணிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதல்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக அவர் இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்