Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூர் அருகே நகைக்காக மூதாட்டி கழுத்தறுப்பு! சிகிச்சை பலனின்றி பலி!

புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குளத்துப்பட்டியை சேர்ந்த ராமரின் மனைவி பச்சையம்மாள்(65). இவர் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று இரவு தனியாக இருந்த பச்சையம்மாள், கழுத்தில் அறுபட்ட காயத்துடன் அருகில் உள்ள பெட்ரோல் பம்புக்கு வந்துள்ளார். யாரோ மர்ம நபர்கள் தனது வீட்டுக்கு வந்து கழுத்தை அறுத்து நகைகளை திருடி சென்றதாக கூறினார். இதனையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகைக்காக மர்மநபர்கள் கழுத்தை அறுத்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்