பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு நடிகர் எஸ்.வி.சேகர் மாலையணிவித்து மரியாதை… ( பேட்டி வீடியோ இணைப்பு )
திருச்சி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்த தின விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள நாடார் உறவின்முறை எல்.ஆர் திருமண மண்டபத்தில் இன்று காலை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் எஸ்வி. சேகர் கலந்துகொண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் அனைவருக்கும் லட்டு இனிப்பு வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் திருச்சி நாடார் உறவின்முறை தலைவர் எம்.இளவேந்தன், செயலாளர் சண்முகதுரை, இணைச்செயலாளர் வழக்கறிஞர் என்.சிவா, பொருளாளர் பழக்கடை சி.சரவணன், துணைத் தலைவர் சிந்தாமணி ரவி, துணைச்செயலாளர் மதுரா ராஜா, ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி. விஜி திருமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.