ரெயில்வே தொழிலாளர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை தகர்த்து, உத்தரவாத பென்சன் வழங்க வேண்டி மத்திய அரசை கண்டித்து திருச்சி பொன்மலை பணிமனை ஆர்மரிகேட் முன்பு,எஸ்.ஆர்.எம்.ஏ தொழிற்சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் வீரசேகரன்தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், ரெயில்வே துறையில் செய்துவந்த பல வேலைகள் அவுட்சோர்ஸ் என்ற பெயரில் தனியாரிடம் தாரைவார்ப்பதை தடுத்திட வேண்டும். ரெயில்வே தொழிலாளர்களின் பணி இழப்பு மட்டுமின்றி,
பொது மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாவதை தடுத்திட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மத்திய அரசு அறிவித்தபடி ஆண்டிற்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்.பி.எஸ் என்ற புதிய பென்சன் திட்டத்தில் பணி ஓய்வின் போதும், ஓய்வூதியம் பெறும் போதும் பலன் இல்லாத அந்த திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது போல் உத்தரவாதத்துடன் கூடிய பென்சன் திட்டத்தை பெற வேண்டும்என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
1
of 927
Comments are closed.