திருச்சி புத்தூர் கீழவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கி என்கிற வெங்கடேசன் (வயது 24) இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலில் உள்ளார் இந்த நிலையில் அவர் புத்தூர் ஸ்ரீனிவாசன் ஐந்தாவது மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் பெண்ணை காதலித்தார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் தாயாருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் ரவுடி வெங்கியை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கி, நேரடியாக அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தார்.பின்னர் வீட்டின் ஜன்னல் கதவு, மொபட் ஆகியவற்றை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வெங்கியை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

Comments are closed.