Rock Fort Times
Online News

முட்புதருக்குள் பிணமாக கிடந்த வட மாநில தொழிலாளி : போலீசார் விசாரணை….

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ்.புதூர் பகுதியில் முட்புதருக்குள் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு 50 வயது இருக்கும். வட மாநிலத்தை சேர்ந்த அவர், அந்தப் பகுதியில் கூலி வேலை செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவ இடத்தில் வாட்டர் பாட்டில் மற்றும் பூச்சி மருந்து டப்பா ஆகியவை காலியாக கிடந்தன. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்தது. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்