திருச்சியில் பரபரப்பு: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் த.வெ.க. தொண்டருக்கு தீக்காயம்…!
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்துக்கு இன்று (ஜூலை 18) பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் திருச்சி, சிந்தாமணி பகுதி வெனிஸ் தெருவில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது பட்டாசு வெடித்ததில் த.வெ.க.
தொண்டர், பெயிண்டர் செந்தில்குமார்(43) என்பவர் கையில் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments are closed.