அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அதிமுக அம்மா பேரவை சார்பில் வருகிற ஜூலை 27-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ள இந்த முக்கிய கூட்டங்கள் அனைத்தும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெறுகின்றன. கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில்
24 -10- 2026 அன்று அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Comments are closed.