Rock Fort Times
Online News

இறப்புச்சான்றிதழ் வேணுமா? 1000 ரூபாய் கொடு! திருச்சி அருகே அரசு மருத்துவர் அட்டூழியம் (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம் மேய்க்கல் நாயக்கன்ப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் ராமச்சந்திரன், அதே ஊரை சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது பாட்டியின் இறப்பூச்சான்றிதழை கேட்டிருக்கிறார். அப்போது அந்த மருத்துவர் ரூ.1,000 தந்தால்தான் சான்றிதழ் தருவேன் என்றும், பணம் தராவிட்டால் ஊராட்சி தலைவர் மற்றும் வி.ஏ.ஓவிடம் உனது பாட்டியின் மரணம் இயற்கையானது என்று எழுதி வாங்கி வாருங்கள். அல்லது இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்திருந்தால் மட்டுமே இறப்பு சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறுகிறார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்