Rock Fort Times
Online News

திருச்சியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்..

தமிழ்நாடு அரசு நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான பதிவு செய்யும்  முகாம் இன்று ( 24.06.2023 ) நடைபெற்றது. இதேபோல, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிக்கு பதிவு முகாமை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்.கே. என்.நேரு துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதி குழு தலைவரும், கவுன்சிலருமான முத்துச்செல்வம் வரவேற்றார். முகாமில் கலெக்டர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ், தொழிலதிபர் அருண் நேரு, மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளர் வைரமணி, ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண், மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் சாவித்திரி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு தகுந்த ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்