Rock Fort Times
Online News

ஆந்திர தொழிலதிபரிடம் பண மோசடி…! வியாபாரி மீது வழக்கு…

திருச்சியில், ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் குறவெங்கடேஷ் (வயது 46). இவர் குண்டூரில் மிளகாய் தூள் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் மதுரையில் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த வகையில் நடராஜன், குண்டூர் மிளகாய் தூள் கம்பெனிக்கு ஆன்லைன் மூலம் 10 டன் மிளகாய் துாள் கேட்டு ஆர்டர் செய்துள்ளார். அதற்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் செலுத்தினார். மீதமுள்ள 1 லட்சத்து 41 ஆயிரத்து 800ஐ காசோலையாக கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு பணத்தை கொடுக்காமல் நடராஜன் காலம் தாழ்த்தியதால் குறவெங்கடேஷ் திருச்சி எடமலைப் பட்டிபுதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பேபிஉமா, நடராஜன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்