திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பெட்டவாய்த்தலை, சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, ஜீயபுரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனைகளை எடுத்துக் கூறி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அமைச்சருடன் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கதிர்வேல், அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் ச.துரைராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஏ.கே.அருண், பெட்டவாய்த்தலை ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஜீயபுரம் காதர், ஒன்றிய கவுன்சிலர் ராஜன் பன்னீர்செல்வம், சிறுகமணி நகரச் செயலாளர் வாசுதேவன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிறுகமணி பேரூராட்சி மன்ற தலைவர் சிவகாமசுந்தரி ராஜலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.ஆர்.ராஜலிங்கம், சிறுகமணி நகரச் செயலாளர் கே.ஆர்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிறுகமணி பேரூர் கழக பொறுப்பாளர் ராஜவேல், திருச்சி மாவட்ட வழக்கறிஞர் அணியை சேர்ந்த சந்துரு மற்றும் தோழமைக் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.