2011ம் ஆண்டை போல அதிமுக, தேமுதிக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்… திருச்சி வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பேச்சு…!
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. அந்த கூட்டணிக்கு 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பிரேமலதா பேசியதாவது:-
மனிதர்களாக பிறந்து தெய்வங்களாக மாறிய எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 பேரின் ஆசியோடு அமைந்துள்ள இக்கூட்டணி மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி. 19ம்தேதி காலையிலேயே சென்று இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விடுங்கள். லேட்டாக போனால் உங்கள் ஓட்டை இங்குள்ள ஆளுங்கட்சியினர் போட்டு விடுவார்கள். பணபலம், ஆட்சி பலம், அதிகார பலம், அதிகாரிகள் பலத்துடன் ஆளுங்கட்சியினர் உங்களை சந்திக்க வருவார்கள். நீங்கள் கூட்டணி பலம், அன்பு பலத்தோடு அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். 2011ல் ஜெயலலிதா, விஜயகாந்த் அமைத்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. அதன்பிறகு தற்போது அமைந்துள்ள இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பிற கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி மக்களை வஞ்சிக்கும் கூட்டணி. அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைறே்றவில்லை. வீட்டுவரி, சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீரழிவு, பாலியல் கொடுமைகள் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் மக்கள் தங்களது ஒற்றை விரலால் ஓங்கி அடித்து தண்டனை கொடுக்க வேண்டும். திருச்சி தொகுதியில் கருப்பையாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அவர் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவார். நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பால்பண்ணை – துவாக்குடி வரையிலான சர்வீஸ் சாலை திட்டம் நிறைவேற்றப்படும். பெல் நிறுவனத்திற்கான ஆர்டர்கள் தனியார்களுக்கு வழங்கப்பட்டதால் அதை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான சிறு, குறு சார்பு நிறுவனங்களின் தொழிலாளர்கள் குடும்பங்கள் வறுமையில் உள்ளன. அதிமுக வெற்றி பெற்றால், தனியாருக்குச் செல்லும் ஆர்டர்கள் பெல் நறுவனத்திற்கே கிடைக்க வழிவகை செய்யப்படும். இத்திட்டங்கள் எல்லாம் நிறைவேற, கருப்பையாவுக்கு இரட்டைஇலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், ஜெ. சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் டி.வி. கணேஷ், சன்னாசிப்பட்டி பாரதிதாசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினீயர் கார்த்திகேயன், மாநில துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, பகுதி செயலாளர்கள் பூபதி, சுரேஷ் குப்தா, ரோஜர், அன்பழகன் நிர்வாகிகள் கலிலுல் ரகுமான், வாழைக்காய் மண்டி சுரேஷ், கயிலை கோபி, தேமுதிக பகுதி செயலாளர் என்.எஸ்.எம்.மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.