திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை உள்ளிட்ட பணிகளையும், புதிதாக சாலை அமைக்கும் பணியினையும் இன்று ( 22.07.2023 ) தொடங்கி வைத்தார். திருச்சி மண்டலம் மூன்றுக்கு உட்பட்ட 10 வார்டுகளில் மொத்தமாக 400 சாலைகள் புதிதாக அமைக்கப்படுகிறது. அவைகளின் மொத்த மதிப்பு ரூ.39.65 கோடியாகும்.
இந்நிகழ்வில் மண்டலம் 3ன் குழு தலைவர் மதிவாணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நீலமேகம், கொட்டப்பட்டு தர்மராஜ், சிவா , செந்தில், கார்த்தி, ரமேஷ் , தாஜுதீன், பியூலா மாணிக்கம், சீத்தாலட்சுமி, வக்கீல் கோவிந்தராஜ், எல். ரெக்ஸ், மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.