மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் திருவாரூர் மாவட்ட தலைவராக எஸ். பாஸ்கரும், மயிலாடுதுறை மாவட்ட தலைவராக கே. அகோரமும், திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளராக சி.செந்திலரசனும் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் பதவியில் இருந்து நீக்கி பாரதிய ஜனதா கட்சி தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தை மிரட்டியதால் அகோரம் பதவி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற இருவர் என்ன காரணத்துக்காக நீக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை. மாவட்ட தலைவர் பதவியில் இருந்து 2 பேர் அதிரடியாக நீக்கப்பட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.