தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்…* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு உடனடியாக தமிழக அரசு தீர்வுகாண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். தென்காசியில் கட்சி பொதுக்கூட்ட மேடையில் சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில்,” அதாவது இவ்வளவு மோசமாக மின்வெட்டு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நேற்று இரவு முழுக்க மின்வெட்டு. மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியவில்லை. திடீரென வருகிறது. திடீரென்று போகிறது. மின்சாரம் போவது ரொம்ப நேரம். ஆனால் வருவது கொஞ்ச நேரம். இப்படி இரண்டு நாளா ரொம்ப படாத பாடுபட்டோம். இந்த மின்வெட்டு பிரச்சனையை தீர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் மின்சாரம் இல்லாமல் மனிதனால் வாழ முடியுமா?. இங்கே இப்போது கரண்ட் ஆப் ஆயிச்சு என்று வைத்து கொள்ளுங்கள் அஞ்சு நிமிஷம் உட்காருவீங்களா? நம்மளால் அஞ்சு நிமிஷம் அரை மணிநேரம் கூட மின்சாரம் இல்லாமல் இங்கே இருக்க முடியாது. மின்வெட்டு என்பது ஒரு கடுமையான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்கிற முறையில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசாங்கம் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆட்சிக்கு வந்து 30 நாள் தான் ஆகிறது என்றெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மின்சாரம் போன்ற அத்தியாவசியமான பிரச்சனைகள் வருகிறபோது மிக அவசர உணர்வோடு தமிழ்நாடு அரசாங்கம் தலையிட்டு மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், என்றார்.

Comments are closed.