திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று ( 28.07.2023 ) நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், மணிப்பூர் சம்பவத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். பின்னர் அவர்கள், மாநகராட்சி நுழைவு வாயிலில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், ரெக்ஸ், சுரேஷ், பிரபாகரன், பைஸ் அகமது, அபிஸ் முத்துக்குமார், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.