திருச்சி தெப்பக்குளம் பகுதியில் அன்பில் தர்மலிங்கத்திற்கு நினைவு வளைவு அமைக்க வேண்டும்…
மாநகராட்சி கூட்டத்தில் திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் கோரிக்கை...
திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று ( 28.07.2023 ) நடந்தது. கூட்டத்தில், திருச்சி கிழக்கு ந3ச மாநகர செயலாளரும், மண்டலம் 3-ன் தலைவருமான மு.மதிவாணன் பேசியதாவது:-
முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு திருச்சியில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு ‘கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என பெயர் சூட்டிட வேண்டும். அதேபோல, 1968-ம் ஆண்டு முதல் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று திருச்சி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவையாற்றிய ‘சர்வ கட்சி தலைவர்’ என அனைவராலும் அழைக்கப்பட்ட அன்பில் தர்மலிங்கத்திற்கு அவர் வாழ்ந்து மறைந்த திருச்சி தெப்பக்குளம் கோட்டைவாசல் அருகில் ‘அன்பில் தர்மலிங்கம் நினைவு வளைவு’ அமைத்திட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழி நின்று திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 36 கவுன்சிலர்கள் ஆதரவுடன் இச்சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி தருமாறு முன்மொழிகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.