Rock Fort Times
Online News

மணிப்பூர் சம்பவம்: காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோரின் அறிவிப்பின்படி மணிப்பூர் கலவரத்தில் பழங்குடி இன பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞா்  எம்.சரவணன் தலைமையில் திருச்சி அண்ணா சிலை அருகே மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞா் சரவணன், தொழிற்சங்க துணைத் தலைவர் எல்.ஐ.சி.ஜெயராமன், மாவட்ட துணை தலைவர் முரளி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஜி.எம்.ஜி.மகேந்திரன், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், கிழக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ரபிக் மற்றும் மாரியப்பன், நாச்சிகுறிச்சி அருண் பிரசாத், கருப்பு கண்ணன், திம்மை செந்தில்குமார், கலை பிரிவு சண்முகம், முகமது ரியாஸ், மன்சூர், வழக்கறிஞர் பிரிவு சுப்பிரமணி, சிவகாமி, நீலாம்பரி, அமிர்தா, ஜெயபிரதா, பவித்ரா, முகமது இர்ஃபான், சிந்தை புவன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன்  செய்திருந்தாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்